சவுதி அரேபியாவில் மெக்கா ஓட்டலில் தீ விபத்து: 1000 ஆசிய ஹஜ் யாத்ரீகர்கள் வெளியேற்றம்.சவுதி  அரேபியாவின் மக்கா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயமடைந்ததை அடுத்து புனித யாத்திரை  சென்ற ஆயிரம் ஆசிய பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்   என சிவில் பாதுகாப்பு  அமைப்பு  கூறியுள்ளது.


ஓட்டலின் 8வது தளத்தில் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டு காயம் அடைந்த 2 பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் என அந்த அமைப்பு கூறியுள்ளது.


கடந்த  செவ்வாய் கிழமை இந்த வருடத்திற்கான ஹஜ் பயணம் தொடங்கியதை அடுத்து இதுவரை 10 லட்சத்திற்கும் கூடுதலானோர் மக்கா நகருக்கு  சென்று  சேர்ந்துள்ளனர்.


இந்த நிலையில் மெக்கா அருகேயுள்ள கஷிஸியா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.


ஓட்டலின் பெயர், பயணிகளின் நாடு மற்றும் தீ விபத்திற்கான காரணம் ஆகியவற்றை  குறித்த  தகவலை  அந்த  அமைப்பு  வெளியிடவில்லை.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.