ஆராய்ச்சி போட்டியில் வேலூர் மாணவிக்கு 2 வது பரிசான ரூ.16 லட்சம் கிடைத்தது.201509150131479803_New-seawater-desalination-technology-research_SECVPF.gifஇங்கிலாந்தில் நடந்த புதிய ஆராய்ச்சி போட்டியில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்த வேலூர் மாணவிக்கு 2-வது பரிசான ரூ.16 லட்சம் கிடைத்தது.


இங்கிலாந்து நாட்டின் ஆம்ஸர்டாம் நகரை தலைமை இடமாக கொண்டு ‘ஆர்எல்இஎக்ஸ் குரூப்’  நிறுவனம்  இயங்கி வருகிறது. அந்த நிறுவனம் பெருகி வரும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், சுகாதாரம் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் வகையிலும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்கான 2015 குரூப் என்விரோமெண்டல் என்ற போட்டியை அறிவித்திருந்தது.


இந்த போட்டி உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்களின் கண்காணிப்பில் நடந்தது. இதில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி., ஆராய்ச்சி மாணவியான டெவிலினாதாஸ் உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


இதில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாணவி டெவிலினாதாஸ் சூரிய ஒளி சக்தியை பயன்படுத்தி கடல் நீரை குடிநீராக்கி, அதனை வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் வினியோகம் செய்வதற்கான ‘சலினோ’ என்கிற புதிய ஆராய்ச்சியில்  ஈடுபட்டு  வெற்றி பெற்றார்.


இந்த புதிய கண்டுபிடிப்பில் சூரிய ஒளி சக்திக்காக பயன்படுத்தப்படும் பேனல் உள்ளிட்ட கருவிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக போட்டியை நடத்தும் குழுவினர் இந்த சலினோ ஆராய்ச்சியை 2-வது இடத்திற்கு தேர்வு செய்து அதற்கு பரிசு தொகையான 25 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கி பாராட்டியுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.16 லட்சம் ஆகும்.


இங்கிலாந்தில் நடந்த போட்டியில் ரூ.16 லட்சம் பரிசு பெற்ற மாணவி டெவிலினாதாசை வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.