பெண் போலீசிடம் ரூ. 20 ஆயிரம் பேரம் பேசிய பிக் பாக்கெட் பெண்: வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு.bit-packetசென்னையில் மாநகர பஸ்களில் பிக்பாக்கெட் அடிக்கும் பெண்கள் அதிகரித்துள்ளனர். வடபழனியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், கணவருடன் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பெண் ஒருவர் பிடிபட்டார்.


இதே போல அவ்வப்போது பிக்பாக்கெட் அடிக்கும் பெண்களும் சிக்கி வருகிறார்கள்.


இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகரில், பஸ்சில் பிக்பாக்கெட் அடித்து பிடிபட்ட பெண் ஒருவர், சுற்றி நிற்கும் கூட்டத்தை பற்றியெல்லாம்  கவலைப்படாமல்,  பெண்  போலீஸ்  ஒருவரிடம்  ரூ.20 ஆயிரம் லஞ்சம் தருவதாக பேரம் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அப்போது பொது மக்கள், அவரை சரமாரியாக தாக்கி அவதூறான வார்த்தைகளாலும்  வசைமாரி  பொழிகிறார்கள்.  இந்த காட்சிகள் அனைத்தும்  ‘வாட்ஸ்அப்’ பில்  வெளியாகி உள்ளது.


இது பற்றிய விவரம் வருமாறு:–


சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகரில் நேற்று மாலையில் மாநகர அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த சென்னை ஜாபகர்கான் பேட்டையை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சக பயணியின் கைப்பையை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். அதில் 130 ரூபாய் பணம் மட்டுமே இருந்தது.


இதைப் பார்த்து பயணிகள் கூச்சல் போட்டனர். இதையடுத்து சாலையில் நடந்து  சென்றவர்களும், மற்ற பயணிகளும் பிக்பாக்கெட் பெண்ணை விரட்டிச்  சென்று  பிடித்து  சரமாரியாக அடித்து  உதைத்தனர்.


அப்போது  அந்த  வழியாக  வந்த பெண் போலீஸ் ஒருவர், இதைப்பார்த்து அங்கு போய் விசாரித்தார். இதைத்தொடர்ந்து பொது மக்கள், பிக்பாக்கெட் பெண்ணை போலீசிடம் ஒப்படைத்தனர்.


பெண் போலீஸ்,  அந்த  பெண்ணிடம்  விசாரணை  நடத்திக்கொண்டே, யாராவது போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்யுங்கள் என்று கூறுகிறார்.


அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், எங்கிட்ட துப்பாக்கி இருந்தா உன்ன சுட்டு  விடுவேன்  என்று மிரட்டினார்.


இப்படி  சுற்றிலும் பொது மக்கள் நின்று கொண்டு, ஆவேசமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அம்மா கூட (பிக்பாக்கெட் பெண்) நிறைய பேர் வந்திருப்பாங்க, நல்லா விசாரியுங்கள் என்று போலீசிடம் சிலர் கூறினர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காட்சி அளித்தது.


ஆனால்  எதைப்பற்றியும் கவலைப்படாமல், பிக்பாக்கெட் அடித்த பெண்ணோ... பெண் போலீசிடம் உங்களுக்கு ரூ.20 ஆயிரம் தந்து விடுகிறேன் என்னை விட்டு விடுங்கள் என்று கூறுகிறார். இதனால் பெண் போலீசும், சுற்றி நிற்பவர்களும்  அதிர்ச்சியடைந்தனர்.


உடனே பெண் போலீஸ்... இந்த பொம்பளையை பார்த்தீங்களா... எனக்கே 20 ஆயிரம்  ரூபாய்  தருகிறேன்னு  சொல்கிறார் என்று கூறினார்.


அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் பிக்பாக்கெட் பெண்ணின் தலையில் ஆத்திரத்தில் ஓங்கி ஒரு குத்து விடுகிறார். இதனால் வலி தாங்க முடியாமல் பிக்பாக்கெட் பெண் அழுதார்.


அதற்குள் போலீஸ் ஜீப் அங்கு வந்தது. அதில் ஏற்றி அப்பெண்ணை சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.