22ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் முத்துப்பேட்டையில் மத்திய மண்டல ஐஜி ஆய்வுமுத்துப் பேட்டையில் 22ம்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடை பெறுவதையொட்டி ஊர் வல பாதையை மத்திய மண்டல ஐஜி ராம சுப்பிரமணியன்  பார்வை  யிட்டு  ஆய்வு  செய்தார்.


திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டையில் வருகிற 22ம்தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடை பெறுகிறது. இதனையடுத்து காவல் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் முன் ஏற்பாடுகள்  செய்யப் பட்டு  வருகிறது.


விநாயகர் ஊர்வலத்தில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது.


இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக திருவாரூர் எஸ்.பி. ஜெயசந்திரன் முத்துப் பேட்டையில் முகாமிட்டு எஸ் டி பி ஐ கட்சியினர் மற்றும் அனைத்து ஜமாத்  நிர்வாகிகளை  தனித் தனியாக  சந்தித்து  கருத்து கேட்டறிந்தார்.


மேலும் நேற்று காலை விநாயகர் சிலை ஊர்வல கமிட்டியினரை சந்தித்து ஆலோசனை  நடத்தினர். இந் நிலையில் நேற்று மாலை மத்திய மண்டல ஐஜி. ராம சுப்பிரமணியன் விநாயகர் சிலை ஊர்வல பாதையை பார்வையிட முத்துப்பேட்டைக்கு  வருகை  தந்தார்.


முன்னதாக வனத்துறை அலுவலக கட்டிடத்தில் காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளி டம் ஆலோசனை  நடத்தினார். பின்னர் சிலை ஊர்வலம்  துவங்கும் ஜாம்புவானோடை வடகாடு, சிவன் கோவில் பகுதியை பார்வையிட்டார்.


பின்னர் அங்கிருந்து  புறப்பட்டு ஜாம்புவானோடை தர்கா கோரையாற்று பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார்.  பதற்றமான  பகுதியான ஆசாத் நகர் மெயின் ரோடு, பழைய பேருந்து நிலையம், நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல்,  ஓடக்கரை  ஆகிய  பகுதிகளை  நடந்து சென்று பார்வையிட்டார்.


பின்னர் விநாயகர் சிலை கரைக்கும் பகுதியான செம்படவன் காடு பாமினி ஆற்று பாலம் மற்றும் கரைகளை  பார்வையிட்டு  அதிகாரிகளிடம்  ஆலோசனை  நடத்தினார்.


திருவாரூர் எஸ்.பி. ஜெயசந்திரன், தஞ்சாவூர் எஸ்.பி. தர்மராஜ், நாகை எஸ்.பி. அபினவ் குமார்,  மன்னார்குடி ஆர்.டி.ஓ. செல்வசுரபி, முத்துப் பேட்டை டிஎஸ்பி  அருண்,  இன்ஸ்பெக் டர்  ராஜ் குமார்  ஆகியோர்  உடன்  இருந்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.