3 வயதிலேயே முதலைகளோடு சண்டை போடும் சிறுவன்.a97258d0-b37c-475c-8256-193ca9d5817d_S_secvpf.gifமுதலை வேட்டை என்றதுமே நினைவுக்கு வருவது, எப்போதும் தொலைக்காட்சியில் முதலைகளுடன் வலம் வரும் ஸ்டீவ் இர்வின்தான்.


முதலைகளின்  காதலனாக  திகழ்ந்த இவர், சில வருடங்களுக்கு முன் விஷமீன் கடித்து இறந்தது உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


அந்த சோகத்தைப் போக்கும் வகையில் தற்போது உதயமாகியிருக்கிறான் ஆஸ்திரேலியாவைச்  சேர்ந்த குட்டி ஸ்டீவ் இர்வின். இவனது பெற்றோர்களான க்ரெக், ஜூலியா இருவருமே வனவிலங்கு ஆர்வலர்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? 3 வயதிலேயே தனியாக முதலைகளைப் பிடிக்க தொடங்கிய ‘குட்டி ஸ்டீவ் இர்வின்’ சார்லி பார்கருக்கு தற்போது 5 வயது.


இவனது பெற்றோர் விக்டோரியா நகரில் பலாரட் என்ற வனவிலங்கு பூங்காவை நிர்வகித்து வருகின்றனர். பள்ளிக்குச் செல்லும் சார்லி, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் விலங்குகளுக்கு உணவிடுவது, சுற்றுலாப் பயணிகளை காட்டிற்கு அழைத்துச் செல்வது, உப்பு நீர் முதலையை பின் பக்கத்திலிருந்து வளைத்துப்பிடிப்பது என்ற ஒரு முழுமையான காட்டு ரேஞ்சராகவே  மாறியுள்ளான்.


இதனால், அந்த பூங்காவிற்கு வரும் அனைவரும் சார்லியை ஜூனியர் ஸ்டீவ் இர்வின் என்றே அழைக்கின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.