மக்காவுக்கு ஹஜ் பயணம் சென்ற 3,415 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: ஹஜ் கமிட்டி தலைவர் தகவல்dca667cd-77e6-4966-9317-01d3f3a23cb1_S_secvpf.gifசவூதி அரேபியாவில் உள்ள புனித நகரான மக்காவில் ஹரமில் விரிவாக்கப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கிரேன் முறிந்து விழுந்து 107 பேர் பலியானார்கள்.


இந்தியாவில்  இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் ஹஜ் புனித பயணமாக  மக்கா சென்றுள்ளனர். அவர்களில் கிரேன் விபத்தில் சிக்கி 2 பேர் இறந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.


தமிழகத்தில் இருந்து சென்ற முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஹஜ் கமிட்டி  தலைவர்  அபு பக்கர்  தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:–


தமிழகத்தில் இருந்து மக்காவுக்கு 3,415 பேர் ஹஜ் பயணம் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. அடுத்து 24–ந்தேதி தமிழகத்தில் இருந்து மேலும் பலர் மக்கா செல்கிறார்கள்.


மக்காவில் நடந்த சம்பவம் குறித்து அறிய இந்தியாவில் இருந்து 4 பேர் குழு சென்றுள்ளது. அவர்கள் அங்குள்ள நிலவரம் பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.