முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலப் பாதையை நீதிமன்ற உத்தரவுப்படி முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.- இந்திய தவ்ஹீத் ஜமாஅத்இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்தி தொடர்பாளர் அபுபைசல் வெளியிடும் அறிக்கை :


இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளரும், மனுதாரருமான ஏ. முஹம்மது ஷிப்லி திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில்...


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வருடந்தோறும் விநாயகர் ஊர்வலத்தில் நிகழும் மத மோதல்களை தவிர்த்திட கடந்த 2009ம் ஆண்டு முத்துப்பேட்டை மக்களின் சார்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் ஏ. முஹம்மது ஷிப்லி, மாற்றுப் பாதை கோரி அதற்குரிய வரைபடத்துடன் கூடிய பொது நல வழக்கு (எண்: WP. NO. 17277/09) ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.


வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கோகலே தலைமையிலான அமர்வு நீண்ட நேர வாதத்திற்குப் பின் அரசின் கருத்தையும் கேட்டறிந்து அளித்த உத்தரவில்,


மனுதாரர் அளித்திருக்கும்  மாற்றுப் பாதையில் விநாயகர் ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்றும், இதற்கான அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியது. ஆனால் அப்போதைய மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமுல்படுத்தாமல் ஊர்வலப் பாதையில்  சிறிதளவு  மட்டுமே  மாற்றம் செய்தது.


மாவட்ட நிர்வாகம் மாற்றம் செய்த பாதையில் செல்லும் விநாயகர் ஊர்வலத்தால் ஏற்படும் வன்முறையை தடுக்க முடியவில்லை. இதனால் 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை விநாயகர் ஊர்வலத்தின்போது தொடர்ந்து மதப் பதட்டம் ஏற்படுவதும், வழக்குகள் பதிவாவதும் வாடிக்கையாகி விட்டது. காவல்துறையின் பதிவுகளே இந்த உண்மைகளுக்கு சான்றுகளாக உள்ளன.


சென்னை உயர் நீதிமன்றம் 2009ம் ஆண்டு வழங்கிய மாற்றுப் பாதை (எண் : WP. NO. 17277/09) உத்தரவை மாவட்ட நிர்வாகம் முழுமையாக அமுல்படுத்தி விநாயகர் ஊர்வலத்தை பட்டுக்கோட்டை சாலையில் அனுமதிக்காமல் மன்னார்குடி சாலை  வழியாக  மட்டுமே செல்ல  அனுமதிக்க வேண்டும்.


இதை தவிர்த்து ஆயிரக்கணக்கான காவலர்களை நிறுத்தி ஊர்வலம் நடத்தினாலும் வன்முறை நிகழ்வதை தவிர்க்க முடியாது என்பதை வருடந்தோறும் ஏற்படுகின்ற மதப் பதட்டமும் அசம்பாவிதச் சம்பவங்களும் உணர்த்துகின்றன.


2014ம் ஆண்டு பத்திரிகை செய்திபடி 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தும் வன்முறையை அவர்களால் தடுக்க இயலவில்லை. அனைத்து வன்முறைகளும் காவல்துறையின் முன்னிலையிலேயே தான் நடந்தது என்பதாக  உள்ளன.  இதற்கு  வீடியோ பதிவுகள்  ஆதாரங்களாக  உள்ளன.


மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி முத்துப்பேட்டை பகுதியில் அமைதி நிலவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதன் நகல் தலைமைச் செயலாளருக்கும், திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


12002847_904492136253426_7656771796812602228_n


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.