உலகை உலுக்கிய சிறுவனின் தந்தை கண்ணீர் பேட்டி..10384936_919585568132944_5154997577457179224_n copyதாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகி வருகிறார்கள்.


அந்தவகையில், தற்போது தினம்தோறும் நாம் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாகிவிட்ட அகதிகளின் துயரத்தை, வலியை உணர்த்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரகணக்கான மக்களை கண்ணீர் சிந்தவைத்து வருகிறது.


சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு அகதியாக செல்ல முயன்ற போது துருக்கி அருகே படகு விபத்துகுள்ளானதில் ஆலன்(3) மற்றும் அவனது ஐந்து வயது சகோதரன் காலிப்(5) மற்றும் தாய் ரேகனா ஆகியோருடன் 12 சிரியர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள்.


மத்தியதரைகடலில் மூழ்கி இறந்து போன ஆலனின் படம் வெளியாகி உலகின் கள்ள மௌனத்தை  அசைத்து பார்க்க  துவங்கியுள்ள நிலையில், இறந்து போன 3 வயது ஆலனின் தந்தை  செய்தியாளர்களிடம்  பேசியதாவது


”என் மனைவி, குழந்தைகள் என்று ஒவ்வொருவராக காப்பாற்ற முயன்றேன். ஆனால் முடியவில்லை, அவர்கள் அடுத்தடுத்து கடலில் மூழ்கிவிட்டனர்.


என் குழந்தைகள் தான் உலகின் மிக அழகான குழந்தைகள், பெற்றொருக்கு அவர்களின் குழந்தைகளை விட சிறந்த பொக்கிஷம் வேறு ஏதாவது இருக்கிறதா என்ன?


ஒவ்வொரு  காலையிலும்  விளையாட  வேண்டும்  என்பதற்காக அவர்கள் தான் என்னை எழுப்புவார்கள், உலகத்தில் இதைவிட வேறு அழகான ஒன்று இருக்க முடியுமா?” என்று கண்ணீருடன் கேட்க்கும் அந்த  தந்தைக்கு யாரிடமும் பதில் இல்லை.


[gallery columns="1" size="full" ids="26951,26953,26952,26943,26942,26941"]

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.