திப்பு சுல்தான் வாழ்க்கை சினிமா படமாகிறது: ரஜினிகாந்த் நடிப்பாரா? இந்து முன்னனி எதிர்ப்பு. வீடியோ இணைப்பு.thippu.avi_snapshot_01.12_[2015.09.12_08.58.17]திப்பு சுல்தான் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதில், ரஜினிகாந்த் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்நிலையில் இந்து முன்னனி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து முன்னனிக்கும், பாஜவுக்கும் திரைப்பட ஆய்வாளர் சுப குணராஜன்  கூறும்  பதிலை  வீடியோவில் காணத்தவறாதீர்கள்.


திப்பு சுல்தான் வாழ்க்கையை சினிமா படமாக தயாரிக்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது. பிரபல கன்னட படஅதிபர் அசோக் கெனி இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்.


இவர், அர்ஜுனை வைத்து கன்னடத்தில் ‘பிரசாத்’ என்ற படத்தை தயாரித்தவர். இதில், திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த தகவலை அசோக் கெனி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-


“திப்பு சுல்தான் வாழ்க்கையை படமாக்குவது எனது நீண்டநாள் கனவாக இருக்கிறது.  இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இதற்காக ரஜினியை சில வருடங்களுக்கு முன்பு அணுகி பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால், அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு  ஏற்பட்டதால்  படவேலைகளை  தொடங்கமுடியவில்லை.


இந்த படம் தொடர்பாக ரஜினிகாந்தை மீண்டும் சந்தித்துப்பேச திட்டமிட்டுள்ளேன். விரைவில் இந்த சந்திப்பு நடக்கும். அதன்பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.


திப்பு சுல்தானின் பெருமைகள் பலவற்றை இன்னும் உலகம் அறியாமல் இருக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனுக்கு கப்பல்களை பரிசாக  கொடுத்த  பெருமைக்கு  உரியவர்.


திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினிகாந்த் நடித்து, அந்த படம் உலகம் முழுவதும் திரையிடப்படுவதை நினைத்துப்பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. ராஜமவுலி மாதிரி ஒரு திறமையானவர் இந்த படத்தை டைரக்டு செய்யவேண்டும்  என்று  விரும்புகிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து முன்னனிக்கும், பாஜவுக்கும் திரைப்பட ஆய்வாளர் சுப குணராஜன் கூறும் பதிலை வீடியோவில் காணத்தவறாதீர்கள்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.