தூங்கும் டிரைவரை எழுப்பும் செல்போன் ‘ஆப்ஸ்’ கண்டுபிடித்த மாணவனுக்கு பாராட்டு.TamilDailyNews_1734539270402வாகனம் ஓட்டும்போது தூங்கும் டிரைவரை எழுப்பும் வகையில் செல்போன் ‘ஆப்ஸ்’ கண்டுபிடித்த மாணவனை கலெக்டர் பாராட்டினார்.


காஞ்சிபுரம் எஸ்பிஎன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவர், வாகனம் ஓட்டும்போது தூங்கும் டிரைவரை எழுப்பி, விபத்தை தடுக்கும் வகையில் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.


இதை ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்து வாகனத்தில் உள்ள மொபைல் ஹோல்டரில் டிரைவரை பார்ப்பது போல் வைத்துவிட வேண்டும். டிரைவர் கண் அசந்தால்  ஒலி  எழுப்பி  அவரை  தூக்கத்திலிருந்து விழிக்க வைக்கும்.


சாலை  விபத்தை தடுக்கும் வகையிலான இப் புதிய ஆப்ஸை கண்டுபிடித்ததால் மனோகரனுக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளது.

படிப்பின் முழு செலவையும் பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது. மனோகரன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் பிஇ,, தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் எம்இ படித்தவர்.


சாதனை படைத்த மனோகரனை காஞ்சிபுரம் கலெக்டர் சண்முகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இவருடன், தந்தை ராமச்சந்திரன், தாய் ஞானசவுந்தரி வந்திருந்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.