துபாயிலிருந்து பயணம் செய்த பயணிக்கு நடுவானில் நெஞ்சுவலி: சென்னையில் விமானம் அவசர தரையிறக்கம்Emiratessuspendsoperation-peshawar-pakistan-airlines-suspendoperation-_6-25-2014_151890_lதுபாயில் இருந்து இன்று மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. இந்திய வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தபோது 61 வயதான பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.


உடனே, இதுபற்றி விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சென்னையில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக்கூறி, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டனர்.


அனுமதி கிடைத்ததும், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பயணிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டார். பின்னர் 115 பயணிகளுடன் விமானம் கோலாலம்பூர் நோக்கி சென்றது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.