மக்கா கிரேன் விபத்தில் படுகாயம் அடந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லும் சவுதி மன்னர். படங்கள் இணைப்பு.மக்கா மசூதியில் கிரேன் சரிந்து விழுந்த விபத்துக்கு காரணம் பலத்த காற்று அடித்ததே என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.


இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் மக்கா நகரில் உள்ள ஹரத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த 107 பேர் பலியான விபத்துக்கு பலத்த காற்று அடித்ததே காரணம் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.


முஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள ஹரத்தின் மீது ராட்சத கிரேன் ஒன்று வெள்ளி இரவு சரிந்து விழுந்ததில் இரு இந்தியர்கள் உள்பட 107 பேர் பலியாகினர்.


200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 15 பேர் இந்தியாவிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த விபத்து பற்றி கருத்து தெரிவித்துள்ள சவுதியின் உள்நாட்டு பாதுகாப்பு இயக்குனர் ஜெனரல், சுலைமான் பின் அப்துல்லா அல்-ஆம்ரோ “ கிரேன் கவிழ்ந்து விழுந்ததிற்கு, அப்பகுதியில் வழக்கத்திற்கு மாறான சக்தி வாய்ந்த காற்று  வீசியது  தான்  காரணம்” என்று தெரிவித்துள்ளார்.


விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹாஜிகளை மன்னர் சல்மான் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்து ஆறுதல் சொல்லியுள்ளார்.


மேலும் அவர்களின் ஹஜ் செய்வதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும், அவர்களின் பயணம் ஹெலிகாப்டர் மூலம் இருக்கும் என்றும் சொல்லியுள்ளார்.


[gallery columns="2" ids="27135,27134,27133,27132,27131,27130,27129,27128,27127,27126,27125,27124"]

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.