சென்னை விமான நிலையத்தில் மாயமான நகை, பணம் ஆந்திர பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.201509180151302454_FlightAt-the-stationMagic-Jewelry-moneyAndhra_SECVPF.gifசென்னை  மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் பஹ்ரைனில் இருந்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாராயணம்மா (வயது 50) என்பவர் வந்தார்.


இவர் சுங்க இலாகா பகுதியில் இருந்தபோது ரூ.1 லட்சம் மதிப்புள்ள பஹ்ரைன் தினார், 20 பவுன் தங்க நகைகள் இருந்த கைப்பை மாயமானதாக விமான நிலைய போலீசில் புகார் செய்தார்.


இதுபற்றி விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.


அப்போது  நாராயணம்மா  தனது  கைப்பையை  அருகில் இருந்த ஒரு டிராலியில் வைப்பது பதிவாகி இருந்தது. இதையடுத்து அருகில் இருந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரித்தனர்.


இந்த நிலையில் நாராயணம்மாவின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது. நாராயணம்மா தெலுங்கில் பேசியதால் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. உடனே  அந்த செல்போன் எண்ணை போலீசாரிடம் நாராயணம்மா கொடுத்தார். விமான நிலைய போலீசார் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு விசாரித்தனர்.


அப்போது, போனில் பேசிய நபர் திருவண்ணாமலை வி.வி.தாங்கல் புதுகாலனியை சேர்ந்த முருகன் (33) என்பது தெரியவந்தது. முருகன் பஹ்ரைனில் இருந்து சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் அவரது உடைமைகளுடன் ஒரு கைப்பை இருந்துள்ளது.


அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அவர் பேசியுள்ளார். எதிர் முனையில் பேசியவர் தெலுங்கில் பேசியதால் புரியாமல் அழைப்பை துண்டித்துள்ளார்.


இதையடுத்து  அந்த கைப்பையை விமான நிலைய போலீசில் ஒப்படைக்குமாறு முருகனிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து முருகன்  அந்த  கைப்பையை  விமான  நிலைய  போலீசில்  ஒப்படைத்தார்.


அந்த கைப்பை நாராயணம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்கள் கலங்கிய நிலையில் நாராயணம்மா முருகனுக்கும், அதற்கு உதவிய போலீசாருக்கும் நன்றி கூறினார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.