முத்துப்பேட்டையில் நேற்று சூறாவளி காற்றுடன் கன மழை வீடுகள் இடிந்து சேதம் வீடியோ இணைப்புநேற்று மதியம் 12.30 மணியளவில் முத்துப் பேட்டையில் திடீரென்று பயங்கர இடி,  மின்னல்,  சூறாவளி  காற்றுடன் 2 மணி நேரம் கன மழை பெய்தது.


சூறாவளி காற்றால் பல இடங்களில் மரங்கள், வியாபார நிறுவனங்களின் விளம்பர போர்டுகள் உடைந்து விழுந்தன. பல இடங்களில் வீடுகளும் இடிந்து சேதமடைந்தன.


இதில் கொய்யாத் தோப்பு பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரின் கூரை வீடு இடிந்து தரை மட்ட மானது. அப்போது வீட்டிற்குள் இருந்த ஆறுமுகம் மனைவி  பஞ்சவர்ணம்,  மகன்  குமார் இடி பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.


அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர்.  இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதே பகுதியைச் சேர்ந்த  காத்தையன்  என்பவர் வீட்டில் இருந்த வேப்ப மரம் வீட்டின் மீது விழுந்தது.   இதில் அவரது வீடும் சேதமடைந்தது.


பல  இடங்களில் மழை நீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கியது. இந்த இடி மழையுடன் கூடிய கன மழையால் முத்துப் பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Share on Google Plus

1 comments:

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.