டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோ இணைப்பு.air_india_894685gமுன் சக்கரத்தில் ஏற்பட்ட ஆயில் கசிவு காரணமாக நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்தது. அவசரமாக  விமானம்  டெல்லியில் பத்திரமாக தரை இறக்கப் பட்டதால் 130 பயணிகள் உயிர் தப்பினர்.  இந்த சம்பவத்தில் 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.


மத்திய பிரதேசத்தின் கஜூராவோ நகரிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி நோக்கி ஏர் இந்தியா ஏர் பஸ் 320 விமானம் நேற்று மாலை புறப்பட்டது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் உட்பட 130 பேர் பயணம் செய்தனர்.


வாரணாசியை  நெருங்கிய சமயத்தில் விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக முன் சக்கரத்தில் லேசாக தீப்பிடித்து புகை வெளியேறியதாக  கூறப்படுகிறது.


இது குறித்து விமானி, விமான கட்டுப் பாட்டு  அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, விமானத்தை டெல்லி சர்வதேச விமானத்தில் தரை இறக்க உத்தரவிடப் பட்டது. அங்குதான், முன் சக்கர கோளாறு அடைந்த விமானங்களை  பத்திரமாக  இறக்குவதற்கான  வசதிகள்  உள்ளன.


இதையடுத்து, டெல்லி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரை இறக்கப் பட்டது.


விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அறிந்த பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. டெல்லியில் விமானம் தரை இறங்கியதும், ஒருவரை ஒருவர் முண்டியத்து  இறங்க  முயன்றனர்.


இதில், 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.  இத் தகவலை ஏர் இந்தியா நிர்வாகமும், விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மாவும்  உறுதி  செய்துள்ளனர்.


ஏர் இந்தியா விமானம் நடு வானில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் விபரம்..........http://muthupettaimedia.com/httpmuthupetnews-comp27036/

Posted by MuthupetNews.com on Monday, September 7, 2015


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.