சீனாவில் போனை எடுத்து பேசாத காரணத்தினால் மூக்கை கடித்து தின்ற கணவர்.கிழக்கு சீனாவின் சாங்டோங் மாகாணத்தை சேர்ந்தவர் யாங். சமீபத்தில் இவருடைய   கணவர்  இரவு  2  மணியளவில்  போன் செய்துள்ளார். யாங் இரவுப் பணியில் இருந்ததால் போனை எடுக்க முடியவில்லை.


இதனையடுத்து  யாங் மீது கோபம் கொண்ட அவருடைய கணவர் அவர் வேலை செய்யும் பகுதிக்கு சென்றார். இதனையடுத்து சண்டையில் ஈடுபட்டு உள்ளார்.


சண்டையில் யாங் மூக்கை கடித்து தின்றுவிட்டார் என்று சீனப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது.  செல்போன்  அடித்தபோது எடுக்காத யாங் பின்னர்  முயற்சி செய்து  உள்ளார்  என்றும்  தெரிவிக்கப்பட்டு  உள்ளது.


யாங்கின்  மூக்கு கிட்டத்தட்ட முற்றிலுமாக போய்விட்டது. அவருடைய நிலை மிகவும்  மோசமாக  உள்ளது.  அவரது  மூக்கு சரியாக இயங்க தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட வேண்டும் என்று டாக்டர்கள்  தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையே  யாங் அவருடைய கணவர் திருமணம் செய்துக் கொண்டபோதே விவாகரத்து செய்துக் கொண்டனர் என்றும் கூறப்படுகிறது. யாங்கின்  கணவருக்கு  ஏற்கனவே  திருமணம்  ஆகிவிட்டது.


யாங்கின் குழந்தையை விற்க அவருடைய கணவர் விற்பனை செய்ய முயற்சித்ததால் இவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து விவாகரத்து ஆகி உள்ளது. ஆனால் அவ்வப்போது யாங்கிடம் அவருடைய கணவர்  பேசுவார்  என்றும்  கூறப்படுகிறது.


மூக்கை கடித்து தின்றது தொடர்பாக  வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் போலீசார் யாங்கின் கணவரை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். யாங்கின் மூக்கை சரிசெய்ய டாக்டர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.