உலகின் மனசாட்சியை உலுக்கும் குழந்தையின் புகைப்படம்.11933484_1057733827579442_7100174103331578580_n copyஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடும். வியட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூரத்தை உலகுக்கு காட்டியது  ஒரு புகைப்படம் தான், ஆப்ரிக்காவில் நிலவிய கொடிய வறுமையை  சரியாக  உணர்த்தியது  ஒரே  ஒரு  புகைப்படம் தான்.


தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகிவருகிறார்கள். அந்தவகையில், தற்போது தினம் தோறும் நாம் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாகிவிட்ட அகதிகளின் துயரத்தை, வலியை உணர்த்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரகணக்கான மக்களை கண்ணீர் சிந்தவைத்து வருகிறது.


ஆனால் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு புகலிடம் தேடி வரும் அகதிகள், தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளின்  மனநிலை  இந்த புகைப்படத்தை  பார்த்த  பிறகாவது மாறுமா?


சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு அகதியாக செல்ல முயன்ற போது, படகு விபத்துகுள்ளாகி மத்தியதரைகடலில் முழ்கி இறந்து போன ஒரு குழந்தையின் இந்த படம், உலகின்  கள்ள  மௌனத்தை  அசைத்து பார்க்க துவங்கியுள்ளது.


உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு வரும் அகதிகள், தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மாறுமா?


11933484_1057733827579442_7100174103331578580_n copy11052231_1057733824246109_8328521919442112512_n copy11988705_767161516744042_7534512762191327588_n copy


தாயின் தாலாட்டில் உறங்க வேண்டிய  பாலகன்..

அலையின் தல்லாட்டத்தில்  கண்மூடி கரைசேர்ந்து கிடக்கிறது பிணமாக....


சிரியாவில் ஷியாக்களுக்கு மத்தியில் தினம் தினம் சாவதை விட இந்த கடல் சாவு  ஒன்றும்  கடினம் இல்லை என்று நினைத்தாயோ....


நீ தினம் தினம் உறங்க உன் தாய் எத்தனை நாள் கண் விழித்தாலோ தெரியவில்லை.
நீ நிரந்தரமாய் உறங்கும் உன் புகைப்படம் கண்டு இரவு என் தூக்கம் தொலைந்ததடா மகனே.....


...கூத்தாநல்லூர் ஜின்னா..

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.