முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலப்பாதையை மாற்ற வேண்டும் என த.த.ஜமாத் கோரிக்கை.1509083_821972144586511_8167676084095365673_nவருடா வருடம் பிரச்சனையை ஏற்படுத்தி வரும் முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வல பாதையை முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பாதையை மாற்ற கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கோரிக்கை வைத்தது.


மாவட்ட செயளாலர் தலைமையில் முத்துப்பேட்டை கிளை நிர்வாகிகள் இன்று காலை (07.09.2015)   ஆட்சியரை நேரில் சந்தித்து   முத்துப்பேட்டை வினாயகர் ஊர்வலத்தை 5, 6 கிலோமீட்டர்  தூரம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி வழியாக தூக்கி செல்லாமல் அவர்கள் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து பிரச்சனைக்கு வழிவகுக்காமல் இருக்க ஆவன செய்யுமாறு திருவாரூர் மாவட்ட  ஆட்சியரை  சந்தித்து தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் கோரிக்கை வைத்தது.


கவனமாக அனைத்தையும் கேட்டுகொண்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.  அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயளாலர் முத்துப்பேட்டை மக்களின் நியாயமான கோரிக்கைகளை  விபரமாக  எடுத்து கூறினார்.


முஸ்லிம்களுக்கு  பாதுகாப்பு என்பது மட்டும் அல்ல... அரசுக்கு வீண் சிலவுகளும் இருக்காது.. என்பதை கவனத்தில் கொண்டு நல்ல முடிவு எடுப்பார்கள்  என்று  நம்புவோம்.


தகவல்.  முத்துப்பேட்டை அன்சாரி.


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்த பின் வெளிவந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் காட்சி.


1509083_821972144586511_8167676084095365673_n11988750_821972181253174_6811533670243197145_n11998917_821972107919848_1757954846569691572_n


Share on Google Plus

1 comments:

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.