முத்துப்பேட்டையில் நேற்றும், இன்றும் இடியுடன் கூடிய மழை. வீடியோ இணைப்பு.VID_20150905_060259.3gp_snapshot_00.10_[2015.09.06_13.50.59]காவிரி டெல்டாவில் நேற்று பல்வேறு இடங்களில் திடீரென மழை பெய்தது. முத்துப் பேட்டையில்  நேற்றும் இன்றும் அதிகாலையில் தொடங்கிய மழை பலத்த இடியுடன் கொட்டித் தீர்த்தது.


திருச்சி, தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்தது. வெயில் கொடுமை தாங்காமல் மக்கள் அவதிப்பட்டனர்.


அதே சமயம் திருச்சியில் இரவில் தொடர்ந்து 2 நாட்கள் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. ஆனால் நேற்று முன் தினம் மழை இல்லை. இந் நிலையில் நேற்று டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.


நாகை நகரில் நேற்று மதியம் 1 மணியளவில் 10 நிமிடம் லேசான மழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் நேற்று முன் தினம் இரவு மிதமான  மழையும்,  நேற்று மதியம் 15 நிமிடம் லேசான மழையும் பெய்தது.


முத்துப் பேட்டையில் நேற்று  அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய  மழை 7 மணிவரை கொட்டியது.  மீண்டும் இன்று அதிகாலை 5 மணிக்கு இடியுடன் துவங்கிய மழை  காலை 10 மணி வரை பெய்து தீர்த்தது.


இதனால் பட்டுக் கோட்டை சாலை, தெற்கு தெரு, பேட்டை பகுதி சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.