அரசு பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஓட்டை வழியே விழுந்தார். வீடியோ இணைப்பு.POLIMER NEWS_20150917_1732.ts_snapshot_00.08_[2015.09.17_14.06.56]தென்காசியில் இருந்து புனலூர் வந்த அரசு பஸ்சில் பலகை உடைந்ததால் ஓட்டை வழியாக இளம்பெண் சாலையில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.


கேரளா மாநிலம், காயங்குளத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்வாதி (30). சமீபத்தில் ராஜபாளையம் வந்த இவர்கள் இருவரும், நேற்று காயங்குளம் புறப்பட்டனர்.


தென்காசியில் இருந்து புனலூர் சென்று காயங்குளம் செல்ல திட்டமிட்டு, தென்காசி பணிமனைக்கு சொந்தமான அரசு பஸ்சில் பயணித்தனர்.


அந்த பஸ்சின் பல இடங்களில் ஓட்டை இருந்ததால் பலகைகள் வைத்து ஒட்டு போடப்பட்டிருந்தது. பஸ்சின் பின்பக்க இருக்கையில் ராஜனும், ஸ்வாதியும் அமர்ந்திருந்தனர்.


பஸ் புனலூர் பஸ் நிலையம் அருகே சென்றபோது, ஸ்வாதி எழுந்துள்ளார். அப்போது ஓட்டையில் அடைத்து வைத்திருந்த ஒரு பலகை திடீரென கீழே விழுந்து, ஓட்டை வழியாக ஸ்வாதி சாலையில் விழுந்தார்.


இதை பார்த்த அவரது கணவர் மற்றும் சக பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர். உடனே பஸ் நிறுத்தப்பட்டது.


சாலையில் விழுந்த ஸ்வாதி அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் சட்டென எழுந்துவிட்டார். பயணிகளும், பொதுமக்களும் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


அங்கு சிகிச்சைக்கு பிறகு ஸ்வாதி தனது கணவருடன் புனலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.


புனலூரில் நடந்த சம்பவம் குறித்து, அரசு போக்குவரத்துக் கழக நெல்லை கோட்ட நிர்வாக இயக்குநர் கஜேந்திரனிடம் கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பாக, தென்காசி பணிமனை மேலாளர் சசிகுமார், கண்காணிப்பாளர் மற்றும் 2 தொழில்நுட்ப ஊழியர்கள் என 4 பேரை உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளோம்.


பஸ்களில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், உடனடியாக பஸ்சை நிறுத்தி, அதை சரி செய்தபிறகே மீண்டும் இயக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.