கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவரை சந்திக்க விரும்பும் பேஸ்புக் நிறுவனர்கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க முஸ்லிம் பள்ளி மாணவர்  அகமது முகமது  ஆதரவு  தெரிவிக்கும் வகையில், அவரை சந்திக்க விரும்புவதாக  பேஸ்புக் நிறுவனர்  மார்க் ஸக்கர்பெர்க், கூறியுள்ளார்.


பேஸ்புக்கில் அவர் இட்டுள்ள பதிவில் “ புதிய பொருட்களை உருவாக்குவதிலும்,  அறிவியலிலும்  அதிக  ஆர்வமும், கனவும், லட்சியமும்
கொண்டவர்கள் பாராட்டப்பட வேண்டும்.


மாறாக கைது செய்யப்படக் கூடாது. ’அகமது, பேஸ்புக் தலைமையகத்திற்கு வர விரும்பினால், நான் உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்’. கண்டுபிடிப்புகளை தொடருங்கள்”  என்று  தெரிவித்துள்ளார்.


மார்க் ஸக்கர்பெர்க் மட்டும் அல்ல, ஹிலாரி கிளிண்டன் உட்பட பல முக்கிய நபர்கள்  மற்றும் அமெரிக்க பொது மக்கள் மாணவர் அகமது முகமதுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


அதில் ஒருவர் “ ஒரு வெள்ளை இன சிறுவன் அணு இணைவு உலையை உருவாக்கினால் அது பாரட்ட தகுந்த சாதனை. அதுவே ஒரு முஸ்லிம் கடிகாரம் உருவாக்கினால் ?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.


ஒரு ஆண்டு முன்னர் வெள்ளை இன சிறுவன் ஒருவன் அணு இணைவு உலையை உருக்கி  பலரது  பாராட்டுகளை  பெற்றது  குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.