அதிரையில் கட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ரபீக் என்பவர் மின்சாரம் தாக்கி பலி.திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ரபீக் (45). புரோட்டா மாஸ்டர். இவர் அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தனது மைத்துனர் சாகுல் அமீது வீட்டிற்கு புரோட்டா போடுவதற்காக வந்திருந்தார்.


இன்று அதிகாலை ரபீக் அதிராம்பட்டினம் அருகே உள்ள மழவேணில்காடு கிராணி  திடல்  பகுதியில்  உள்ள  குட்டைக்கு கால் கழுவ சென்றார்.


அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பலியானார்.


இது குறித்து அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இது  குறித்து  விசாரணை நடைபெற்று வருகிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.