சிங்கப்பூர் தப்பிச் சென்ற தஞ்சை வாலிபர் திருச்சி திரும்பி வந்த போது கைது.arrestகொலை முயற்சி வழக்கில் ஆஜராகாமல் சிங்கப்பூர் தப்பிச் சென்ற தஞ்சை வாலிபர் திருச்சி விமான நிலையத்துக்கு திரும்பி வந்த போது சிக்கிக் கொண்டார்.


தஞ்சை மாவட்டம், ஒரத்தாடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை (39). இவரை கடந்த 1993ம் ஆண்டு மே 10ம் தேதி கொலை முயற்சி வழக்கில் ஒரத்தநாடு  போலீசார்  கைது  செய்து  சிறையில்  அடைத்தனர்.


பின்னர்  ஜாமீனில் வெளியே வந்த அண்ணாதுரை, தஞ்சை நீதி மன்றத்தில் நடை பெற்ற வழக்கு விசாரணையின் போது ஆஜராகாமல் சிங்கப்பூருக்கு தப்பிச்  சென்றார்.


இதையடுத்து,  நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரை, போலீசார் வலை வீசித் தேடி வந்தனர். மேலும்,  அவரது  படத்துடன்  கூடிய  அறிவிப்பு அனைத்து போலீஸ்  நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் அறிவிப்பு பலகையில்  வைக்கப் பட்டிருந்தது.


இதை  அறியாத  அவர், நேற்று  காலை  சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட டைகர் ஏர் வேஸ் விமானம் மூலம் திருச்சியை வந்தடைந்தார். விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளின் ஆவணங்களை சோதனையிட்ட இமிகிரேசன் அதிகாரிகள் இவரை சோதனையிட்ட போது அவர், ஒரத்தநாடு போலீசாரால் தேடப்படும்  குற்றவாளியான  அண்ணாத்துரை  என்பது  தெரிய வந்தது.


இதைத் தொடர்ந்து இமிகிரேசன் அதிகாரிகள் அண்ணாதுரையை ஏர்போர்ட் போலீசில்  ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த ஒரத்தநாடு போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.


இச் சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.