மக்கா ஹரத்தில் கிரேன் விழுந்து பலர் பாதிப்பு படங்கள் இணைப்பு மக்கா ஹரத்தில், சஃபா ,மர்வா பகுதியின் மேல் பகுதியில்  கஃபா நிர்மாண பணிகள் நடந்து வருகிறது.


இன்று   மாலை  5 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்றில்  கிரேன் குடை சாய்ந்து சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  இதில் உயிரழப்புகள் குறித்த அச்சம் நிலவுகிறது. பலர் காயம் அடைந்துள்ளனர்.


எனினும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வல்ல அல்லாஹ் அனைத்தையும்  நன்மையாக்கித் தருவானாக...


சற்று முன் கிடைத்த செய்தி...


கிரேன் விழுந்த விபத்தில் 62 பேர் வரை இறந்திருப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும்  தகவல்கள்  வெளியாகியுள்ளது.


எல்லாம் வல்ல அல்லாஹ்  இறந்த ஹாஜிகளின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக. ஆமீன்.


[gallery columns="1" size="full" ids="27087,27086,27085,27084,27083"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.