சவுதியில் பல் பிடுங்கச் சென்றவரின் உயிர் பறிபோனது. வீடியோ இணைப்பு.சவுதி அரேபியாவில் பல் வலியால் டாக்டரிடம் சென்ற ஒருவர் மயங்கி விழுந்து  உயிரிழந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வடமேற்கு சவுதியில் உள்ள ஹெய்ல் நகரில் வசிக்கும் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் தாங்க முடியாத பல்வலியுடன் அருகாமையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.


வலிக்கு காரணமான சொத்தைப் பல்லை பிடுங்கி எடுத்துவிட வேண்டும் என்று கூறிய டாக்டர், வலி தெரியாமல் இருக்க ஒரு ஊசியை போட்டு, பல்லை பிடுங்க ஆரம்பித்தார்.


ஊசி போட்ட சில நிமிடங்களுக்குள் மயங்கி விழுந்த அந்நபர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


அவரது உடலை வாங்கிக் கொள்ள மறுத்த உறவினர்கள் இந்த மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.