ஹஜ் பயணம் புறப்பட்டவர் விமானத்தில் ஏறும்போது பெண் பயணி திடீர் மரணம்!20150714_020508_harianterbit_jamaah_hajiசென்னையில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்பவர்களுக்கான சிறப்பு விமானம் நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது.அதில், பயணம் செய்ய வந்த அனைவரும் பாதுகாப்பு, சுங்கம், குடியுரிமை ஆகிய சோதனைகளை முடித்துக் கொண்டு விமானத்தில் ஏறினர்.


இதில்,  ராயப்பேட்டையை  சேர்ந்த இஸ்மாயில், அவரது மனைவி ஜமீலா பேகம் (58) ஆகியோர் விமானத்தில் ஏறியபோது, திடீரென ஜமீலா பேகம், நெஞ்சு வலிப்பதாக கூறி, இஸ்மாயில் மீது சாய்ந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.


இதையடுத்து, விமான நிலைய மருத்துவ குழுவினர், அங்கு சென்று மயங்கிக் கிடந்த ஜமீலா பேகத்தை பரிசோதனை செய்தனர். அதில், அவர் மாரடைப்பால் இறந்தது தெரிந்தது.


தகவலறிந்து வந்த விமான நிலைய போலீசார், சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதை தொடர்ந்து 348 பயணிகளுடன், விமானம்  ஒரு  மணிநேரம்  தாமதமாக 7.30 மணிக்கு  புறப்பட்டு  சென்றது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.