அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டது ஏன்? கேரள வாலிபர் பரபரப்பு பேட்டி.279384099253873285200836318boat-people-sri-lankans-return-home-from-aus-092012-e1348965311668ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று, அபுதாபியில் 4 மாத சிறை தண்டனைக்கு பின்னர் நாடு கடத்தப்பட்ட கேரள வாலிபர் ஜாபிர் கூறினார்.


அபுதாபியில் உள்ள 10 இந்திய வாலிபர்களுக்கு ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக அந்நாட்டு அரசுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


4 மாத சிறை தண்டனைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் சமீபத்தில் நாடு கடத்தப்பட்டனர். இவர்களில் 2 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் கேரளா திரும்பினர்.


அவர்களிடம் மத்திய உளவு அமைப்பு மற்றும் கேரள உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகின.  இந்நிலையில் அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்ட, மலப்புரம் திருநாவாயா பகுதியை சேர்ந்த ஜாபிர் கூறியதாவது:


என்னுடைய 2 நண்பர்கள் சில மாதம் முன் திடீரென மாயமானார்கள். இது தொடர்பாக அபுதாபி போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் இருவரும் சிரியா சென்று ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்ததாக தெரியவந்தது.


இதனால் அவர்களுக்கும் எனக்கும் தொடர்பு இருக்கலாம் என அபுதாபி போலீசார் சந்தேகித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன், நான் அபுதாபி மன்னராக இருந்த ஷேக் அல் நஹ்யானின் சிலையுடன் சேர்ந்து நின்று ஒரு புகைப்படம் எடுத்தேன்.


அதை பேஸ் புக்கில் வெளியிட்டு இருந்தேன். மன்னரின் கையில் ஒரு துப்பாக்கி இருக்கும். அந்த துப்பாக்கி என்னுடைய கையில் இருப்பது போல நான் படத்தை பிரசுரித்திருந்தேன்.


இந்த  படம்தான்  எனக்கு வினையாக அமைந்தது.  இவ்வாறு அவர் கூறினார்.

Share on Google Plus

1 comments:

  1. K.S.A.ஜமாலுதீன்September 7, 2015 at 3:54 PM

    ஷேய்க் நஹ்யானுக்கு சிலை வச்சாச்சா ? அதான் உண்மையான சிலை வரப்போகிறதே ! ஈராக்கில் சிலை வைத்த சத்தாமைக் காணோம், பாவம் அபூ தாபி என்ன பாடெல்லாம் படப் போகிறதோ ?

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.