தமிழக வாழைப்பழத்துக்கு வளைகுடா நாடுகளில் வரவேற்புimagesவளைகுடா நாடுகளில் பிலிப்பைன்ஸ், இந்திய வாழைப்பழங்கள் அதிகப்படியாக இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வளைகுடா நாடுகளில் தமிழக வாழைப்பழங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.


தமிழக  வாழைப்பழங்களில் அதிகப்படியான இனிப்பு சுவையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமீப காலமாக தமிழகத்திலிருந்து  வாழைப்பழ  ஏற்றுமதி அதிகரித்துள்ளது.


கடந்த ஆண்டு சவுதி அரேபியா, யுஏஇ, குவைத் உள்பட அரபு நாடுகளுக்கு 200 கன்டெய்னர்கள் மூலம் 4 ஆயிரத்து 300 டன் வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 12 ஆயிரத்து 900 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


கடந்த  ஆண்டுடன்  ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகம். சமீபத்தில் துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் ஸ்டார் பிரஷ் என்ற பெயரில் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாட்டில் புதிய பிராண்டில் தமிழக வாழைப்பழங்களை  சமீபத்தில்  அறிமுகப்படுத்தியது.


நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தமிழகத்தை சேர்ந்த முஜீப் கூறுகையில்,  வாழைப்பழங்களில்  14லிருந்து 15 சதவீதம் வரை இனிப்பு சுவை இருக்கும். ஆனால் தமிழக வாழைப்பழங்கள் 18லிருந்து 21 சதவீதம் இனிப்பு சுவை உள்ளது.


எனவே பழத்தின் ருசி அதிகமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட எங்கள் நிறுவனத்தின் மூலம் பிரத்யேகமாக தமிழக வாழைப்பழங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாதம்தோறும் 75 டன் வரை ஏற்றுமதி செய்கிறோம்.


தமிழக பழங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் 10 ஆயிரம் டன் வாழைப்பழங்கள் மாதம்தோறும் இறக்குமதி செய்யப்படுகிறது.


வரும் காலங்களில் மாதம்தோறும் 500 டன் வரை தமிழக வாழைப்பழங்களை அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் தமிழகத்தில் வாழைப்பழ  விவசாயம்  பெரும்  வளர்ச்சியடையும் என்றார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.