அவரது குழந்தையை நானே வளர்ப்பேன்: வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் கைதான என்ஜினீயரின் முன்னாள் காதலி உருக்கம்.2b580e35-09a6-412e-9fa6-257582061721_S_secvpf.gifஎனக்காகவே கோகுல் குற்றங்களை செய்து உள்ளார். அதற்கு கைமாறாக அவரது குழந்தையை என் குழந்தைபோல் வளர்ப்பேன் என்று கோகுலின் நண்பரின் மனைவியும் முன்னாள் காதலியுமான ஷாலினி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.


பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மற்றும் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றிற்கு கடந்த 5-ந்தேதி அதிகாலை விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக ‘வாட்ஸ் அப்’ மற்றும் செல்போன் வழியாக மிரட்டல் வந்தது.


இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வந்த தனியார் நிறுவன கம்ப்யூட்டர் என்ஜினீயர் கோகுல் என்பவரை கைது செய்தனர்.


கோகுல் தனது நண்பரின் மனைவியான ஷாலினியை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அடைவதற்காக ஏற்கனவே தனது மனைவி அனுராதாவை கொலை செய்ததும், தனது நண்பரை போலீசில் சிக்க வைத்து அதன் மூலம் நண்பரின் மனைவியை அடைவதற்கும் திட்டம் தீட்டி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட கோகுலை நேற்று முன்தினம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


கோர்ட்டு மூலம் கோகுலை 2 வாரம் போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். தற்போது இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பெயரில் கோகுல் மிரட்டல் விடுத்து இருப்பதால் அவருக்கும் தீவிரவாத இயக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரிக்க மத்திய புலனாய்வு குழு அதிகாரிகள் பெங்களூரு வந்து உள்ளனர்.


கோகுலிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ள லேப்-டாப், பென் டிரைவ், ஸ்மார்ட் போன், சிம் கார்டு உள்ளிட்ட பொருட்களை மத்திய புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.


விமான நிலையங்களுக்கு நண்பரின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதான கோகுலுக்கும் அவரது நண்பரின் மனைவி ஷாலினிக்கும் இந்த குற்ற சம்பவங்களில் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் ஷாலினியிடம் விசாரணை நடத்தினர்.


ஷாலினியிடம் 3 பெண் போலீஸ் அதிகாரிகள் இந்த விசாரணையை நடத்தினார்கள். அப்போது, ஷாலினி வெளிப்படையாகவும் யதார்த்தமாகவும் விசாரணை அதிகாரிகளுக்கு பதில் அளித்து உள்ளார். அப்போது அவர் கூறியதாக வெளியான தகவல்கள் வருமாறு:-


எனக்கும், கோகுலுக்கும் கேரள மாநிலம் திரிச்சூரில் பள்ளி, கல்லூரியில் படித்தபோது பழக்கம் ஏற்பட்டது. கோகுல் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அது நிறைவேறவில்லை. இருவரின் சாதியும் தடையாக இருந்ததும் ஒரு காரணம். இதைத்தொடர்ந்து எனது குடும்பத்தினர் எனக்கு வேறு திருமணம் செய்து வைத்தனர்.


திருமணமான ஒரு ஆண்டுக்குள் எனது கணவரிடம் இருந்து நான் விவாகரத்து பெற முயன்றேன். ஆனால் எனது கணவர் என் மனதை மாற்றினார். அதைத்தொடர்ந்து நானும் எனது கணவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தோம். எங்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. இருப்பினும் இருவருக்கும் அடிக்கடி சில பிரச்சினைகள் ஏற்பட்டன.


இந்த நிலையில், 2011-ம் ஆண்டு கோகுலுடன் எனக்கு மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே கோகுல் பெங்களூரு வந்தார். நாங்கள் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே அவரும் குடிவந்தார். என் கணவருடன் கோகுல் நண்பராக பழகினார்.


ஆனால் என்னை அடைவதற்காக கோகுல் அவரது மனைவியை கொலை செய்தது, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, இதற்கான சதிதிட்டங்களை அவர் தீட்டியது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எங்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட பழக்கத்தினால் தான் அவர் இதுபோன்ற சதி திட்டங்களை தீட்டியுள்ளதாக தெரிகிறது.


கோகுல் எனக்காக இவ்வளவு ஆபத்தான செயல்களை செய்து இருக்கிறார் என்று நினைக்கும்போது அவர் மீது வெறுப்பு ஏற்படுவதற்கு பதில் பரிதாபமும் அன்பும்தான் ஏற்படுகிறது. கோகுல் செய்த தவறான செயலால் அவர் சிறை சென்றுவிட்டார். மனைவியும் இறந்துவிட்டார். இந்த நிலையில் பெற்றோரை இழந்த குழந்தை தற்போது எங்கள் பாதுகாப்பில் தான் இருக்கிறது. அந்த குழந்தையை எனது 2 குழந்தைகளுடன் சேர்த்து எனது குழந்தையாக வளர்ப்பதே நான் கோகுலுக்கு செய்யும் கைமாறாக கருதுகிறேன். எனது இந்த முடிவுக்கு கணவர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. எனது கணவர் எளிமையானவர். மிகவும் நல்ல மனிதர்.


இவ்வாறு ஷாலினி கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் அதிகாரி தகவல்
முத்துப்பேட்டை செப்டம்பர் -09
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்ய இருப்பதாக திருத்துறைப்பூண்டி உதவி செயற்பொறியாளர் அழகேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறுகையில்: திருத்துறைப்பூண்டி உபகோட்டம் முத்துப்பேட்டை 33 ஃ 11 கே.வி. துணை மின்நிலையத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் 10.09.2015 வியாழன் கிழமை (நாளை) நடைப்பெற உள்ளது அது சமயம் முத்துப்பேட்டை நகர் பகுதி, ஜாம்புவானோடை, கோவிலூர், கீழநம்மங்குறிச்சி, உப்பூர், ஆலங்காடு, செம்படவன்காடு, தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் காலை 9-மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் என்று இவ்வாறு தனது செய்தி குறிப்பில் அழகேசன் தெரிவித்து உள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.