குவைத்தில் ஒட்டகம் மேய்க்கும் தேனி டிரைவர்: மீட்டு தர கலெக்டரிடம் மனைவி மனு.6f46e760-0dff-4e46-973b-db065b438350_S_secvpfதேனி மாவட்டம்  கம்பம் கோம்பை சாலையைச் சேர்ந்த இமாம்ஷா மகன் சதாம் உசேன் (வயது 25). குவைத்தில் டிரைவர் வேலைக்கு கடந்த ஆகஸ்ட் – 2–ந் தேதி சென்றார்.


இதற்காக கும்பகோணம் சோலைபுரத்தைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்து வேலைக்கு சென்றார்.


டிரைவர் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சதாம் உசேன் அங்கு 65 ஒட்டகங்களை மேய்க்கும் பணியை செய்யுமாறு துன்புறுத்தப்பட்டார். அந்த வேலையை  செய்ய  மறுத்ததால் அவருக்கு 2 நாட்கள் உணவு மறுக்கப்பட்டது.


இது குறித்து  சதாம்  உசேனின் மனைவி யாஸ்லின் பானுவிற்கு தெரிய வரவே அதிர்ச்சியடைந்தார்.  தனது  நிலை  குறித்து சதாம் உசேன் நண்பர்களுக்கு  வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்தார். எனவே யாஸ்லின்பானு தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் புகார் அளித்தார்.


மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேசிடமும் புகார் அளித்துள்ளார். அதில் குவைத்தில் கொத்தடிமையாக உள்ள தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


அதன் பேரில் இன்னும் ஓரிரு நாட்களில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை  எடுக்கப்படும்  என  உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.