43 பயிற்சி ஆசிரியர்கள் காணாமல் போன விவகாரம்: போலீசார் பதில் அளிக்க உத்தரவு43 பயிற்சி ஆசிரியர்கள் காணாமல் போன விவகாரம் குறித்த விசாரணையின் போது, குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள காவலர்கள் ஆஜராகி பதில் அளித்தே ஆகவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

மெக்சிகோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி 43 பயிற்சி ஆசிரியர்கள் காணாமல் போயினர். அரசியல் காரணங்களுக்காக இவர்கள் அனைவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

ஒரே இடத்தில் ஏராளமான உயிரிழந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, பயிற்சி ஆசிரியர்கள் காணாமல் போன விவகாரம் சூடுபிடித்தது. இருப்பினும் இது குறித்து மெக்சிகோ அரசு சரியாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவி வருகிறது.

இந்நிலையில் மெக்சிகோவில் பேசிய சர்வதேச மனித உரிமை ஆணையர் ஜோர்டான் இளவரசர் அல் ஹுசைன், உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஆஜராகி, கேள்விகளுக்கு போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.