​மாட்டிறைச்சி விவகாரம்: சுயேட்சை எம்எல்ஏ மீது பாஜக எம்எல்ஏ தாக்குதல்மாட்டிறைச்சி விருந்து விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று பெரும் அமளியை ஏற்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏவுடன் பாஜக எம்எல்ஏ கைகலப்பில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற சுயேட்சை உறுப்பினர் ரஷீத் என்பவர், நேற்று மாலை தனது நண்பர்களுக்கு மாட்டிறைச்சி விருந்து அளித்தாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. ரஷீத்தை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு போட்டியாக தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் போது ரஷீத்தை, பாஜக எம்எல்ஏ ரவீந்தர் ரெய்னா தாக்கினார். அதனை கண்டித்து தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே ரஷீத் மீதான தாக்குதலுக்கு காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது கண்டனம் தெரிவித்துள்ளார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.