சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எலி–நாய்கள் தொல்லை சுருக்கு கயிறு மூலம் நாய்களை பிடித்தனர்சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாய்கள் மற்றும் எலித்தொல்லை அதிகமாக உள்ளது. மாநகராட்சி நாய் பிடிக்கும் ஊழியர்கள் சுருக்கு கயிறு மூலம் நாய்களை பிடித்தனர்.

 

கடும் தொல்லை

சென்னை புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் திறக்கப்பட்டு 2 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குள் கமிஷனர் அலுவலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகள் வளை தோண்டி குடும்பம் நடத்த தொடங்கிவிட்டன. கமிஷனர் அலுவலகம் செயல்படும் 8 மாடிகளிலும் எலிகள் சாம்ராஜ்ஜியம் நடக்கிறது. பகலில் கூட அங்கும், இங்கும் ஓடுகின்றன. பைல்களை கடித்து சேதப்படுத்துகின்றன.

எலிகளை கண்டு பெண் ஊழியர்கள் பயப்படும் நிலை உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் அறையில் கூட 4 எலிகள் குடும்பம் நடத்துகின்றன. சோபாவை கடித்து துவாரம் போட்டு அதற்குள் வாழ்கின்றன.

 

நாய்களும் போட்டி

எலிகளுடன் போட்டி போட்டு நாய்களும் தொல்லை கொடுக்கின்றன. கமிஷனர் அலுவலக வளாகத்தில் 25–க்கும் மேற்பட்ட நாய்கள் குட்டி போட்டு குடும்பமே நடத்துகின்றன. நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் ஏற்கனவே ஒரு முறை பிடித்தனர். நேற்றும் சுருக்கு கயிற்றை வீசி நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வேட்டையாடினார்கள். நேற்றைய வேட்டையில் 5 நாய்கள் சிக்கியது. சில நாய்கள் சுருக்கு கயிற்றில் சிக்காமல் ஓட்டம் பிடித்தன.

 

பிடிபட்ட நாய்களை நாய் வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றனர். நாய்கள் வேட்டை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாய்களை போல எலிகளை வேட்டையாடி பிடிக்கவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். எலிகளையும் உயிரோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.