ராயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்தியவர்கள் இவர்கள் தான் கம்ப்யூட்டரில் வரைந்த படத்தை வெளியிட்டு போலீஸ் தேடுதல் வேட்டைராயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திச் சென்றவர்களின் மாதிரி உருவங்களை கம்ப்யூட்டரில் போலீசார் வரைந்து வெளியிட்டு தேடி வருகின்றனர்.பெண் குழந்தை


சென்னை ராயபுரம், காளிங்கராயன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 29), கூலி தொழிலாளி. இவருக்கு இந்திரா(26) என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த மாதம் இந்திராவுக்கு ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. 


பெண் குழந்தை பிறந்ததற்காக அரசு சார்பில் வழங்கப்படும் நிதி உதவி பெறுவதற்காக கடந்த 15-ந்தேதி மணிகண்டன், இந்திரா ஆகியோர் குழந்தையுடன் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு ஆஸ்பத்திரி ஊழியர்களை பார்ப்பதற்காக இந்திரா சென்றுவிட்டார். 


கம்ப்யூட்டரில் வரைந்தனர்


குழந்தையுடன் இருந்த மணிகண்டனிடம், அங்கு ஒரு ஆண் குழந்தையுடன் வந்த தம்பதியினர் உள்பட 3 பேர் உணவு வாங்குவதற்கு கடை காண்பிக்கும்படி கூறி அவரை ஏமாற்றி அவரது பெண் குழந்தையை கடத்திச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ராயபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து குழந்தையை கடத்திச் சென்ற தம்பதிகளை தேடி வருகின்றனர். அவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவலை வைத்து கடத்தல்காரர்களின் மாதிரி உருவப்படத்தை கம்ப்யூட்டரில் வரைந்தனர்.


ஆந்திரா விரைந்தனர்


போலீசார் நேற்று அந்த புகைப்படங்களை வெளியிட்டு, இவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். பல போலீஸ் நிலையங்களுக்கும் அந்த புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். 


கடத்தல்காரர்களை தேடி தனிப்படையின் ஒரு பிரிவினர் ஆந்திரா விரைந்துள்ளனர். தொடர்ந்து குழந்தையை கடத்திச் சென்ற 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.