விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: கீழக்கரை டி. எஸ். பி. மகேஸ்வரியிடம் இன்று விசாரணை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்செங்கோடு டி.எஸ்.பி. அலுவலகத்திலும், எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் முதல் போலீசார் வரை விசாரணை நடத்தி தொடர்ந்து தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

மேலும் என்ஜினீயர் கோகுல்ராஜ், கொலை வழக்கு, அதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளிடமும், அவர்களின் வீடுகளுக்கு சென்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள யுவராஜ் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வக்கீல் மாளவியாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எனவே அவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து விஷ்ணுபிரியாவின் தோழியான கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரியிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இன்று காலை ஆஜர் ஆகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை டி.எஸ்.பி.மகேஸ்வரி சேலம் ஜங்சனில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் அவரிடம் சி.பி. சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி, டி.எஸ்.பி. ராஜன் ஆகியோர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.