போர் விமானங்களில் பெண்களை பணியமர்த்த திட்டம்: விமானப்படை தளபதிஇந்திய விமானப் படையின் போர் விமானங்களில் பெண்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக இந்திய விமானப்படை தளபதி அரூப் ராகா தெரிவித்துள்ளார்.

 

இந்திய விமானப்படையில் 83வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் காசியபாத்தில் உள்ள ஹின்டோன் விமானப் படை தளத்தில் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய விமானப்படை தளபதி அரூப் ராகா, இந்திய விமானப்படையில் சரக்கு விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் பெண் விமானிகள் பணியாற்றி வருவதாகவும், போர் விமானங்களிலும் பெண்களை விமானிகளாக பணியமர்த்த விமானப்படை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

முப்படைகளில் முதன்முறையாக விமானப்படை போர் விமானங்களில் தான் பெண்கள் பணியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு விமானப் படையின் குரூப் கேப்டன் அந்தஸ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

 

இந்த கவுரவத்தை பெறும் முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். நிகழ்ச்சியின்போது டெண்டுல்கர் விமானப் படையினரின் உடை அணிந்து சக வீரர்களுடன் அணிவகுத்து வந்தார்.

விமானப் படை வீரர்கள் பாராசூட் மூலம் குதிப்பது உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர்.

நிகழ்ச்சியில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.