விபத்தில் உயிர் காக்கும் கருவியை கண்டுபிடித்த 12-ம் வகுப்பு மாணவர் .விபத்தின்போது காயமடைந்தவர்களின் உயிரைக் காக்க உதவும் கருவியை 12-ம் வகுப்பு மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

விபத்தில் சிக்கியவரை சம்பவ பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நேரத்தை ‘கோல்டன் ஹவர்’ என்று குறிப்பிடுகின்றனர். நகரங்களைப் பொறுத்தவரை விபத்துகளின்போது தாமாக முன்வந்து உதவுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் விபத்து நேரிடும்போது உயிர்களைக் காப்பது கடினமாகிறது. அந்த வகையில் முதலுதவி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பள்ளி மாணவர் ஒருவர் அதிநவீன உயிர் காக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் காஜியாபாதை சேர்ந்தவர் ஆக்சாத் பிரகாஷ் (17). இவர் டெல்லி இந்திராபுரத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மருத்துவ அறிவியலில் மிகுந்த ஆர்வமிக்க பிரகாஷ், விபத்துகளில் சிக்குபவர்களின் உயிரைக் காக்க அதிநவீன கருவியை வடிவமைத்துள்ளார்.

அந்த கருவியை கைக்கடிகாரம் போல கையில் அணிந்து கொள்ளலாம். அதனுடன் இணைந்த இதர சென்சார், தொலைத்தொடர்பு கருவிகளை வாகனத்தில் பொருத்த வேண்டும்.

ஒருவேளை விபத்து நேரிட்டால் கையில் அணிந்துள்ள கருவி இதயத்தின் துடிப்பை கணக்கிட்டு தானாக செயல்படத் தொடங்கும். முதலுதவி சிகிச்சையாக கருவியில் இருக்கும் சிறிய ஊசி காயமடைந்தவரின் உடலில் உயிர் காக்கும் மருந்தை செலுத்தும்.

மேலும் கருவியுடன் இணைந்த தொலைத்தொடர்பு சாதனம் அருகில் உள்ள மருத்துவ மையத்துக்கு தானாகவே தகவல் அனுப்பிவிடும். இதன்மூலம் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற முடியும்.

தைவானில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பு குறித்து பிரகாஷ் செயல்விளக்கம் அளித்தார். மருத்துவ கருவிக்கு ‘ஹெலிக்ஸ்சேப்’ என்று பெயரிட்டுள்ள அவர் காப்புரிமையையும் பெற்றுள்ளார்.

எதிர்காலத்தின் ‘ஹெலிக்ஸ்சேப்’ கருவியின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.