கனடா ஒரு பெருமைக்குரிய நாடு. 14 இந்தியர்கள் உட்பட 97 நபர்களுக்கு கனடா பிரஜை. படங்கள் இணைப்பு.கனடாவிற்கு நிரந்தக் குடிவரவாளர்களாக வந்து சுமார் 3 வருடங்களுக்கு பின்னர் நாங்கள் கனடா நாட்டின் பிரஜைகளாக வருவதற்கு எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஆகியவற்றை வெற்றிகரமாக கடந்தாக வேண்டும்.

வயது அதிகம் உள்ளவர்களுக்கு சில விதிவிலக்குகள் உண்டு. அந்த வகையில் நேற்று சனிக்கிழமையன்று காலை கனடாவின் பிரஜைகளாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட 97 வெளிநாட்டவர்களின் சத்தியபிரமாண அரச விழாவிற்கு கனடா உதயன் பிரதம ஆசிரியருக்கும் வந்த அழைப்பை ஏற்று கனடா உதயன் நண்பர்கள் அங்கு சென்றார்கள்.

யோர்க் பிராந்திய பொலிஸ் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மேற்படி விழாவிற்கு கனடா உதயன் நண்பர்கள் சென்றபோது பிராந்திய பொலிஸ் தலைமை அதிபர் ( Police Chief of the York Regional Police) அனைவரையும் வரவேற்றார்.

கனடாவின் லிபரல் கட்சியின் புதிய குடிவரவு மற்றும் பிரஜாஉரிமைகள் அகதிகளுக்கான விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் மெக்கலம் உட்டப பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு விசேட அதிதிகளாக கலந்து கொண்டார்கள்.

இந்த 97 பேரில் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் 14 பேர், இலங்கையைச் சேர்ந்த ஒரு இளம் பெண் என சுமார் 24 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குகின்றார்கள் என அமைச்சர் ஜோன் மெக்கலம் தனது உரையில் குறிப்பிட்டார்கள்.

கனடா உதயன் பத்திரிகையின் நெருங்கிய நண்பர்களான கனடாவின் லிபரல் கட்சியின் புதிய குடிவரவு மற்றும் பிரஜாஉரிமைகள் அகதிகளுக்கான விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் மெக்கலம் மற்றும் பொலிஸ் தலைமை அதிபர் ( Police Chief of the York Regional Police) ஆகியோர் கனடா உதயன் குழுவினரோடு சேர்நது புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

இதில் குறிப்பிடக்கூடிய விடயம் என்னவென்றால் மேற்படி 97 பேருக்கும் கனடாவின் நிரந்தரப் பிரஜைகளாக சத்தியப் பிரமாணம் எடுக்கும் வைபவத்திற்கு தலைமை நீதிபதியாக இருந்து வைபவத்தை வழிநடத்தியவர் திரு வொங் என்பவரை் ஆவார். இவர், மலேசியா நாட்டிலிருந்து தனது 8 வயதில் கனடாவிற்கு வருகை தந்து பல பதவிகளில் இருந்து இந்த உயர் நிலைக்கு வந்தவர். இதை அவர் தனது உரையின்போது குறிப்பிட்டபோது எமது உள்ளம் சிலிர்த்தது.

ஆமாம்! கனடா ஒரு பெருமைக்குரிய நாடுதான்....


கனடா உதயன் செய்திப் பிரிவு

 

[gallery columns="2" ids="29157,29158,29159,29160,29161,29162,29163,29164,29165,29166,29167,29168,29169,29170,29171,29172,29173"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.