முத்துப்பேட்டையிலிருந்து த.மு.மு.க, ம.ம.க சார்பில் 2 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கடலூருக்கு சென்றது.முத்துப்பேட்டை நகர த.மு.மு.க மற்றும் ம.ம.க சார்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் குலஞ்சாவடி மற்றும் கருமாச்சி பாலையம் பகுதிகளுக்கு நிவாரணப் பொருள் வழங்குவதற்காக பொதுமக்களிடம் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பல்வேறு பொருட்கள் திரட்டப்பட்டது.

அதனை லாரிகள் மூலம் ம.ம.க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தீன்முகம்மது வழி அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் ம.ம.க ஒன்றிய செயலாளர் நெய்னா முகம்மது, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முகம்மது பைசல், நகரச் செயலாளர் ஹாமீம், வார்டு செயலாளர் ஜெகபர்சாதிக், நிர்வாகி எடையூர் அகம்மது மற்றும் த.மு.மு.க, ம.ம.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.