துபாய்ல் 2016 முதல் புதிய சட்டம். எம்ப்ளாய்மெண்ட் ஒப்பந்தம் தாய் மொழியில் இருக்கவேண்டும்.பணி ஒப்பந்த அறிக்கை தொழிலாளர்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் - அமீரக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமீரக தொழிலாளர் அமைச்சக மேஜர் ஜெனரல் ஒபய்த் முஹாரி பின் சுரூர் (Obaid Muhari Bin Suroor) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு வெளிநாட்டிலிருந்தோ கொண்டு வந்து பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் / ஊழியர்களின் பணி ஒப்பந்த அறிக்கை (Employment contract) அவர்களின் சொந்த தாய் மொழியிலேயே இருக்க வேண்டும்.

அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்த கடிதத்தில் அவர்களின் வேலை விபரங்கள், சம்பள விபரங்கள், வேலை நேரங்கள் போன்றவை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் இப்புதிய சட்டம் வரும் புத்தாண்டு 2016 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

தாய் மொழியில் ஒப்பந்த கடிதங்கள் வழங்கப்படுவதன் மூலம் அவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகள், வேலை விபரங்கள், சம்பள விபரங்கள் போன்றவைகளை அறிந்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.