வாடிக்கையாளர் தவறவிட்டுச் சென்ற ரூ.21 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டல் சர்வர்:வாடிக்கையாளர் தவறவிட்டுச் சென்ற ரூ.21 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்தார் ஓட்டல் சர்வர்: அன்பளிப்பையும் மறுத்த அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களில் ஆப்பிள் பீ என்ற பெயரில் சங்கிலித்தொடர் உணவகங்கள் இயங்கி வருகின்றன. அவ்வகையில், மேற்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் பிரெஸ்னோ பகுதியில் இந்நிறுவனத்தின் கிளை உணவகம் ஒன்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்காக வந்த ஒரு தம்பதியர், ஞாபகமறதியாக தங்களது பணப்பையை மேஜை மீது மறந்து வைத்துவிட்டுப் போனதை அறிந்த உணவகத்தின் சர்வர், அந்தப் பையை எடுத்து மேனேஜரிடம் தந்து போலீசாரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, பணத்தை பறிகொடுத்த தம்பதியர் எல்லாமே 100 டாலர்கள் கரன்சி நோட்டுகளாக 32 ஆயிரம் டாலர்களுடன் (இந்திய மதிப்புக்கு சுமார் 21 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்) தங்களது கைப்பை காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்க, உங்கள் பணப்பையும் அதிலுள்ள மொத்தப்பணமும் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கிறது. நீங்கள் வந்து பெற்றுச் செல்லலாம் என போலீசார் பதில் அளித்தனர்.

இதையடுத்து, உரிய விசாரணைக்கு பின்னர் அந்த பணம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பையை கண்டுபிடித்து, போலீசில் ஒப்படைக்குமாறு கூறிய அந்த சர்வர், பிரெஸ்னோவில் உள்ள ஆப்பிள் பீ உணவகத்தில் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலைபார்த்து வருகிறார். அவர் கண்டெடுத்து, திருப்பி அளித்த தொகையானது அவரது ஓராண்டு சம்பளத்துக்கு இணையானதாகும்.

எனினும், தனது பெயரையோ, அடையாளத்தையோ வெளியிட மறுக்கும் அவர், பணத்தை திரும்பப்பெற்ற தம்பதியர் அளிக்க முன்வந்த அன்பளிப்பையும் பெருந்தன்மையுடன் மறுத்து விட்டார். ஹூம், இந்தக் காலத்தில் இப்படியும் சில நேர்மையாளர்கள்!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.