வெறும் 29 ரூபாய்க்கு 4ஜி சேவை!வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வெறும் 29 ரூபாய்க்கு அளிக்க ஐடியா செல்லுலார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன.

இந்த நிலையில் ஐடியா செல்லுலார் நிறுவனம் தென் இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சுமார் 75 நகரங்களுக்கு தனது 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் 2 மற்றும் 3 தர நகரங்களில் அதிகளவில் கவனத்தைச் செலுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அறிமுகச் சலுகை மற்றும் குறைந்த விலை கட்டணமாக 4ஜி சேவையை வெறும் 29 ரூபாய்க்கு அளிக்க ஐடியா செல்லுலார் திட்டமிட்டுள்ளது.

2016-ல் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் 750 நகரங்களுக்குத் தனது அதிவேக 4ஜி சேவையைக் கொண்டு சேர்க்க ஐடியா செல்லுலார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.