முத்துப்பேட்டை அருகே 3,000 ஆதார் பதிவுகளுடன் லேப்டாப் மாயம்.முத்துப் பேட்டை அடுத்த எடையூர் பகுதியில் விடுபட்டவர்களுக்காக ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

பாலக் குறிச்சி தன்ராஜ் (26) என்பவர் லேப்டாப் ஆப்ரேட்டராக செயல் பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் பணி முடிந்து அப் பகுதி கிராம நிர்வாக உதவியாளர்கள் பாண்டியன், நரசிம்மனிடம் ஆதார் பதிவுகளுடன் உள்ள லேப்டாப்பை ஒப்படைத்து விட்டு சென்றார். லேப்டாப்பை பெற்று கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள பீரோவில் வைத்ததாக கூறப்படுகிறது.

இந் நிலையில் நேற்று முன் தினம் வந்த தன்ராஜ், மீண்டும் ஆதார் அட்டைக்கு புகைப் படம் எடுக்கும் பணியை துவங்க கிராம உதவியாளர்களிடம் லேப் டாப்பை கேட்டார். அப்போது போது லேப்டாப்பை திரும்ப வாங்கி சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தாரிடம் தன்ராஜ் புகார் செய்தார். இதை தொடர்ந்து லேப்டாப்புக்கு ரூ.5 ஆயிரம் தருவதாக கிராம உதவியாளர்கள் கூறினர். இதை வாங்க மறுத்து எடையூர் போலீசில் தன்ராஜ் புகார் செய்தார்.

அதில் லேப்டாப்பில் 3,000 ஆதார் கார்டுகளின் பதிவுகள் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து கிராம உதவியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3,000 ஆதார் பதிவுகளில் அப் பகுதியை சேர்ந்த இளம் பெண்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் புகைப் படங்கள் மற்றும் குறிப்புகள் உள்ளதால் யாரேனும் திட்ட மிட்டு திருடி சென்றனரா அல்லது கிராம உதவியாளர்கள் உதவியோடு மறைக்கப் பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.