முத்துப் பேட்டை பாமனி ஆற்றில் மூழ்கிய மாணவரின் உடல் 33 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு.முத்துப் பேட்டையில் ஆற்றில் மூழ்கிய மாணவரின் உடலை 33 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

முத்துப் பேட்டை அடுத்த பெத்த வேளாண் கோட்டகத்தை சேர்ந்த தொழிலாளி நாகராஜ் மகன் அருண் பாண்டியன் (17). முத்துப் பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள பாமினி ஆற்றில் நேற்று முன் தினம் குளித்தார். அப்போது திடீரென அருண் பாண்டியனை காணவில்லை. இதையடுத்து முத்துப் பேட்டை தீயணைப்பு நிலை அலுவலர் சந்திர சேகரன் தலைமையில் வீரர்கள் நெடுஞ்செழியன், பிரபாகரன், சொக்கலிங்கம், விமல்ராஜ், மதன் குமார், செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் மற்றும் திருத்துறைப் பூண்டி தீயணைப்பு வீரர்கள் நேற்று முன் தினம் காலை முதல் ஆற்றில் தேடினர்.

பின்னர் படகுகள் வரவழைக்கப்பட்டு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரவு பகல் பாராமல் தேடினர்.
இந் நிலையில் 300 மீட்டர் தூரத்தில் உள்ள கீழ நம்மங் குறிச்சி- மேல நம்மங் குறிச்சியை இணைக்கும் பாலத்தின் அடியிலிருந்து மாணவன் அருண் பாண்டியன் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

33 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாணவர் உடல் மீட்கப் பட்டது. மாணவரின் உடலை பார்த்ததும் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். முத்துப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அருண் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப் பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.