பட்டுக்கோட்டையில் போட்டி போட்டு செல்லும் பஸ்கள்: விபத்தில் 4 மாணவிகள் காயம்.பட்டுக்கோட்டையில் காலை நேரத்தில் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மணிக்கூண்டு, அறந்தாங்கி சாலைமுக்கம், வடசேரி சாலை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதிராம்பட்டிணம் சாலையில் சென்று வருகின்றனர்.

ஆனால் இப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அதிலும் காலை பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளை அரசு பேருந்துகள் நிறுத்தி ஏற்றுவதில்லை. அது சம்பந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுகொள்வில்லை. அதே போல் அறந்தாங்கி சாலை முக்கம் வழியாக சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் கடந்து செல்வதினால் தினம் தினம் விபத்து ஏற்படுகிறது.

நேற்று அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை வந்த தனியார் பேருந்தும் வேதாரண்யத்தில் இருந்து தஞ்சை சென்ற பேருந்தும் போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்ல முயன்றதில் தஞ்சை சாலையில் விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு மாணவிகள் உள்பட பயணிகள் சிலர் காயமடைந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தஞ்சை செல்லும் பேருந்துகள் சிலநிமிட இடைவெளியில் புறப்படுவதாலும் போட்டிபோட்டுக்கொண்டு செல்வதாலும் பட்டுக்கோட்டை முதல் தஞ்சை வரை தினம் தினம் ஏற்படும் வாகன விபத்தினை தடுக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் ஒப்புதலும் நிதியும் பெறப்பட்ட புறவழிச்சாலை பணியினை விரைந்து தொடங்கிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.