முத்துப்பேட்டை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவர்கள் காயம்.முத்துப் பேட்டை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவர்கள் காயமடைந்தனர்.திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் செங்காங்காடு, அறமங்காடு பகுதியில் உள்ள 75ம் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இவர்கள் பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று வருகின்றனர். இந் நிலையில் நேற்று மாலை முத்துப் பேட்டையிலிருந்து பள்ளி முடிந்து மாணவர்களை ஏற்றி கொண்டு வேன் வந்தது. துறைதோப்பு- அறவங்காடு சாலையில் டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி வேன் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அறமாங்காட்டை சேர்ந்த எல் கேஜி மாணவன் லோகேஷ் உட்பட 5 மாணவர்கள் காயமடைந்தனர். அலறம் சத்தம் கேட்டு அப் பகுதி பொது மக்கள் வந்து ஜன்னல் வழியாக மாணவர்களை மீட்டனர்.

விபத்து ஏற்பட்டு பள்ளி வேன் சாலையோர வாய்க்காலுக்குள் விழாமல் மரத்தில் சாய்ந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. இது குறித்து முத்துப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.