மூன்றே மாதங்களில் சரிபாதியாக குறைந்த ஐபோன் 5S:ஏகப்பட்ட அறிவிப்புடன் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 5S-ன் உள்நாட்டு சந்தைவிலை 44 ஆயிரத்து ஐநூறாக இருந்தது.

விற்பனை சூடுபிடிக்க தொடங்கிய நேரத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியாவில் விற்பனைக்குவந்த ஐபோன் 6S மற்றும் 6S பிளஸ் வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதால் ஐபோன் 5S-ன் விற்பனை கடும் சரிவை சந்தித்தது.

இந்நிலையில், இந்தியாவில் ஐபோன் விற்பனையில் 50 சதவீதத்தை தன்வசம் வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம், தசராவின்போது ஒருமுறை, தீபாவளியின்போது மறுமுறை தற்போது மூன்றாவதுமுறை என ஐபோன் 5S-ன் விலையை சுமார் 50 சதவீதம்வரை குறைக்க நேர்ந்துள்ளது.

இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 44 ஆயிரத்து ஐநூறாக இருந்த ஐபோன் 5S-ன் தற்போதைய விற்பனை விலை 24,999 ரூபாயாக குறைந்துள்ளது.

இந்த டிசம்பருடன் முடியும் ஆண்டின் நிதி இறுதி காலாண்டில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்த அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளதாக ஐபோன் விற்பனையாளர்கள் கருதுகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.