லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் எலி: 6 மணி நேரம் தவித்த பயணிகள்.மும்பையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எலி ஒன்று இருப்பதை விமானப்பயணிகள் பார்த்து புகார் தெரிவித்ததால், தீவிர பரிசோதனைக்குப் பின்னர் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

அகமதாபாத்தில் இருந்து மும்பை வழியாக லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம், மும்பை விமான நிலையத்தில் இருந்து 12.50 மணியளவில் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தின் கேபினுக்குள் எலி ஒன்று அங்கும் இங்கும் சுற்றித்திரிவதை பார்த்ததாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து விமானம் புறப்படுவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. விமானத்திற்குள் எலி இருப்பது உறுதி படுத்தப்படவில்லை என்றாலும், பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது என்று ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

மேலும், சம்பவம் குறித்து தொழில்நுட்ப குழு விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், விமானம் முழுவதும் சுத்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலசலப்பு காரணமாக, 6 மணி நேரம் தாமதத்திற்குப்பிறகு மாற்று விமானம் மூலம் லண்டனுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.