பிஎஸ்என்எல் அதிரடி சலுகை. 80 சதவிகிதம் கட்டணம் குறைப்பு!புதிய மொபைல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிஎஸ்என்எல் அதிரடியாக கட்டணங்களை குறைத்துள்ளது.புதிய மொபைல் வாடிக்கையாளர்களுக்கு முதல் 2 மாதங்களில் 80 சதவிகிதம் அளவுக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண குறைப்பு நிமிட கட்டணம் மற்றும் நொடி கட்டணம் வசூலிக்கும் திட்டங்களில் இணைபவர்களுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தை மொபைல் நெம்பர் போர்டெபிலிட்டி வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும் என்று பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் வஸ்தவா தெரிவித்துள்ளார்.

37 ரூபாய் செலுத்தி புதிய இணைப்பு வாங்குபவர்கள் பிஎஸ்என்எல் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 10 பைசாவும், இதர நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 30 பைசாவும் வசூலிக்கப்படும்.

அதேபோல், நொடி கட்டணத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அழைப்புகளுக்கு மூன்று நொடிக்கு ஒரு பைசாவும், இதர நெட்வொர்க் அழைப்புகளுக்கு 3 நொடிகளுக்கு 2 பைசா கட்டணமும் செலுத்த வேண்டும் என்றும் அனுபம் வஸ்தவா கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.