எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் மனிதாபிமானமும்....நமது சுங்க இலாகாவின் கெடுபிடியும்...BL02_LOGISTICS_EMI_1224781fஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸிற்கு இருக்கும் மனிதாபிமானம் கூட நம் நாட்டு கஸ்டம்ஸுக்கு இல்லையா?


துபாய்,  ஷார்ஜாவை சேர்ந்த  தமிழ்  நண்பர்கள் 12 லட்சம் மதிப்பிலான 5.5 டன் அளவிலான நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்காக காத்திருக்கிறார்கள்.எமிரேட்ஸ்  ஏர்லைன்ஸ்‬ இந்த பொருட்களை இலவசமாக சென்னைக்கு கொண்டு வர சம்மதித்திருக்கிறார்கள்.துபாயில் இருந்து அனுப்புவதற்கு ட்யூட்டி வரி இல்லை. ஆனால் அப்பொருட்களை  சென்னையில்  இறக்குவதற்கு சேவை வரி கேட்கிறார்கள்.அதுவே கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் ரூபாய் அளவிற்கு வருகிறது. நிவாரணப் பொருட்களுக்கு வரி இல்லாமல் அனுமதியுங்கள் என்று கேட்டாலும்,  அரசு அனுமதியின்றி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று  சொல்லியிருக்கிறார்கள்.மக்களுக்கு சேர வேண்டிய நிவாரண உதவிக்கு ரூல்ஸ் பேசும் நமது அதிகாரிகள். இதற்கு யார் உதவி செய்வார்கள் என்று தெரியாமல் காத்திருக்கும்  இதற்கான  பொறுப்புதாரிகள்.தகவல்....Fahad Ahmed

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.